கட்சியில இல்லாதவங்க பேரைச் சொல்லி கலவரப்படுத்துறாங்க!- ஜெர்க் ஆகும் ஜெயக்குமார்

கட்சியில இல்லாதவங்க பேரைச் சொல்லி கலவரப்படுத்துறாங்க!- ஜெர்க் ஆகும் ஜெயக்குமார்

சானா
readers@kamadenu.in

சென்னையின் புதிய அடையாளங்களில் ஒன்றாக ஆகிவிட்ட ஜெயலலிதா நினைவிடத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் அன்றைய தினம் கண்விழித்தான் பாச்சா.

“முதல்ல அம்மா நினைவிடம். அப்புறம்தான் பேட்டியெல்லாம்” என்று அன்றைய திட்டத்தை ஆவலுடன் சொல்லிக்கொண்டேபோன பாச்சாவைப் பாதியிலேயே ஆஃப் செய்தது பைக்.

“அதான் பராமரிப்புக்காக நினைவிடத்தை மூடுறோம்னு அரசு சொல்லிடுச்சே… மறந்துட்டியா?” என்று பைக் சொன்னதைக் கேட்டதும் பல்ஸ் இறங்கிய பாச்சா, “என்னய்யா இது... திறந்து பத்து நாள்கூட ஆகலை... அதுக்குள்ள பராமரிப்பா? அதுசரி, புதுசா கட்டுன பாலம், ஆஸ்பத்திரி சுவரெல்லாம் பொலபொலன்னு உடைஞ்சு விழுது. கோடிக்கணக்குல செலவு பண்ணி கட்டுன அம்மா நினைவிடத்தையாச்சும் அக்கறையா பராமரிக்கிறாங்களே” என்றான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in