அரசியலில் எதுவும் நடக்கலாம்... திமுக - பாஜக கூட்டணிகூட வரலாம்!- எஸ்.வி.சேகர் பேட்டி

அரசியலில் எதுவும் நடக்கலாம்... திமுக - பாஜக கூட்டணிகூட வரலாம்!- எஸ்.வி.சேகர் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

பாஜகவினர் மனதிற்குள் வைத்து மருகுவதை பொட்டென்று போட்டு உடைப்பவர் நடிகர் எஸ்.வி.சேகர். சமீபத்தில் ஒரு இணைய கூட்டத்தில் அவர் பேசியது இன்னமும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தனது கொள்கையில் உறுதியாக இருக்கும் அவரை ‘காமதேனு' பேட்டிக்காக போனில் தொடர்பு கொண்டேன்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக சரியாக எதிர்கொள்ளவில்லை என்று எதனடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்?

பாஜகவின் இன்றைய முகம் மோடி தான். வேட்பாளர்கள் சிலர் மோடியின் படமே இல்லாமல் ஓட்டு கேட்கப்போனது தவறான செயல். அப்படியொரு சூழல் எனக்கு ஏற்பட்டிருந்தால், நான் பிரச்சார ஜீப்பை விட்டே இறங்கியிருப்பேன். வேல் யாத்திரையையும் கூட, மாநில தலைவர் முருகன் தன்னுடைய புகழுக்கு சவுகரியமாக இருப்பதுபோல் பண்ணிக் கொண்டார். என்னவோ இவரே லார்டு முருகா மாதிரி. நாத்திகம் பேசுபவர்களுக்கு எதிராக மக்களைத் திரட்ட வேண்டும் என்றால், இறைநம்பிக்கையாளர்கள் யாத்திரை என்ற பெயரில் அல்லவா பேரணி நடத்தியிருக்க வேண்டும். யாத்திரை வேளாங்கண்ணியைக் கடக்கும்போது சர்ச்சுக்கும், நாகூரைக் கடக்கும்போது தர்காவுக்கும் போயிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு வெற்றிவேல் வீரவேல் என்று முழங்கி, தன்னுடைய பெயருக்கு பப்ளிசிட்டி தேடிக்கொண்டாரே தவிர, பாஜகவுக்கான வாக்குகளாக அது மாறவில்லை என்பதுதான் உண்மை. பாஜகவில் இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் கூட இருக்கிறார்கள். இந்துக்களிலேயே வெவ்வேறு கடவுளைக் கும்பிடுகிறவர்கள் இருக்கிறபோது, குஷ்புவை கூட்டிக்கொண்டு காவடியெடுத்து கோயிலுக்குப் போகலாம் என்றால் எப்படிச் சரிவரும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in