கரோனா முடிஞ்சதும் வந்துருவேன்... அலைபேசியில் அலப்பறையைக் கிளப்பும் சசிகலா!

கரோனா முடிஞ்சதும் வந்துருவேன்... அலைபேசியில் அலப்பறையைக் கிளப்பும் சசிகலா!

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

சசிகலா சிறையில் இருந்த போதே அதிமுக தொண்டர்கள் பலரும் அவருக்கு கடிதம் எழுதினார்கள். அப்படி எழுதியவர்களில் குருதிக் கையெழுத்திட்டு தங்களின் விசுவாசத்தின் வீரியத்தைக் கூட்டிக்காட்ட முயற்சித்தவர்களும் உண்டு. தனக்கு கடிதம் எழுதியவர்களில் சிலருக்கு மட்டும் பதில் கடிதம் போட்டார் சசிகலா. எஞ்சியவர்களில் சிலரை விடுதலையானதும் நேரில் சந்தித்துப் பேசவேண்டும் என்று சொல்லி அந்தக் கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைக்கச் சொன்னார். இதுகுறித்து காமதேனுவில் நாம் ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம். இப்போது, அப்படி பத்திரப்படுத்தி வைத்த கடிதங்களில் சிலவற்றை தேர்வு செய்து ஒவ்வொருவருக்காய் தானே போன் போட்டுப் பேசிவருகிறார் சசிகலா. இதுதான் இப்போது, அமைதியாகக் கிடந்த அதிமுக வட்டாரத்தில் சலனத்தை ஏற்படுத்தி வருகிறது.

தேர்தலுக்கு முன்பாக, “அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கப் போகிறேன்” என்று சசிகலா அறிவித்தாலும் அவரது எண்ணம் திட்டம் எல்லாம் இந்தத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்திக்கும். அதையொட்டி கட்சிக்குள் கலகம் பிறக்கும். அப்போது, “கட்சியைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் நான் அரசியலுக்கு வருகிறேன்” என்று சொல்லி அதிமுகவுக்கு தலைமையேற்கும் முயற்சியில் இறங்கலாம் என்பதாகவே இருந்தது. ஆனால், அவர் எதிர்பார்த்தபடி அதிமுக படுதோல்வியைச் சந்திக்கவில்லை. ஆட்சியைப் பறிகொடுத்தாலும் 65 எம்எல்ஏ-க் களுடன் வலுவான எதிர்க்கட்சியாக வந்து உட்கார்ந்துவிட்டார் எடப்பாடியார்.

அதேநேரம் அதிமுக தோல்விக்கு தினகரனால் பிரிக்கப்பட்ட வாக்குகள் தான் காரணம் என்ற கருத்தையும் நிலைநிறுத்த வழியில்லாமல் போய்விட்டது. இதனால் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பெரிய அளவில் பிரளயம் வெடிக்கவில்லை. எதிர்கட்சித் தலைவர் தேர்வு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய எதிர் முழக்கமும் அதுவாகவே அடங்கிப் போனது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in