பிடித்தவை 10- சக்தி ஜோதி, கவிஞர், செயற்பாட்டாளர்

பிடித்தவை 10- சக்தி ஜோதி, கவிஞர், செயற்பாட்டாளர்

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர். சங்க இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், “நிலம் புகும் சொற்கள்” (2008) தொடங்கி, “வெள்ளிவீதி” (2017) வரையில் பதினோரு கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். சங்கப் பாடல்கள், நவீன இலக்கியம், நீர் மேலாண்மை, கல்வி, சுற்றுச்சூழல், விவசாயம் சார்ந்து ஏராளமான கட்டுரைகளையும் எழுதிவருகிறார்.

அதில், சங்கப் பெண்பாற் புலவர்களை சமகால இலக்கியத்தோடு ஒப்பிட்டு எழுதிய “சங்கப் பெண் கவிதைகள்” என்கிற கட்டுரைத் தொகுப்பு முக்கியமானது. வெறும் எழுத்தோடு நில்லாமல், விவசாயம் மற்றும் பெண்கல்வியை முன்னிலைப்படுத்தி பல்வேறு ஆக்கப்பணிகளை மேற்கொண்டு வருபவர். தமிழக அரசின் ‘நூலக விருது’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இவருடைய கவிதைகள், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராசர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஆளுமை: இந்தியாவின் ‘நீர் மனிதர்’ என்று போற்றப்படுகிற ராஜேந்திர சிங். ‘நிலத்தில் நீரைத் தேக்கி வைப்பவர் உடலையும் உயிரையும் இணைத்து வைப்பவர்’ என்கிறது ஒரு சங்கப்பாடல். அதன்படி மழைநீர் சேமிப்புத் திட்டத்தின் கீழ் இந்தியாவின் 850 கிராமங்களில் 4,500 தடுப்பணைகளையும் தண்ணீர் சேமிப்புக் குளங்களையும் கட்டியதோடு, இறந்துகொண்டிருந்த பல ஆறுகளுக்குப் புத்துயிரும் கொடுத்தவர்.

கதை: கமலா தாஸை அவருடைய துணிச்சலான ஒளிவு மறைவற்ற எழுத்துகளுக்காகப் பிடிக்கும். அவரது, ‘நீர் மாதுளையின் பூக்கள்’ கதை பால்யத்தின் களங்கமற்ற நினைவுகளின் ஊடாக மேலேழுந்துவரும் காதலைப்பற்றி மென்மையாகப் பேசுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in