கம்பீரமா கால்ல விழுங்க... செல்லூராரின் சென்சேஷனல் அட்வைஸ்!

கம்பீரமா கால்ல விழுங்க... செல்லூராரின் சென்சேஷனல் அட்வைஸ்!

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

2010-களின் பத்தாண்டு முடிந்து புத்தாண்டு தொடங்கிய தருணத்தில் பாச்சாவும் பைக்கும் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். புத்தாண்டு கொண்டாட்டமா, போராட்டமா என்று பகுத்தறிய முடியாமல் எங்கெங்கு காணினும் ஏகக் கூட்டம். பல வீடுகளின் முன்னே கோலங்கள் வேறு. ஆண்களே கோலமாவும் கையுமாக கோகிலாவாகிக் குதூகலித்துக்கொண்டிருந்தனர். “போராட்டத்தைக்கூட நம்மாட்கள் கொண்டாட்டமாபண்றாங்க இல்லடா?” என்று வடிவேலு பாணியில் பைக்குடன் அளவளாவிக் கொண்டே வந்தான் பாச்சா.

அன்றைய பட்டியலில் முதலிடம் அன்புமணிக்கு.

‘போரிஸ் ஜான்ஸனுக்கே வெற்றி தேடித் தந்த சின்னய்யாவே’ எனும் போஸ்டர்களைப் பார்த்து சற்றே கலவரத்துடன்தான் அன்புமணியின் இல்லத்தை நெருங்கினான் பாச்சா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in