பாரதி யார்?- டிஜிட்டல் பின்னணியில் புரட்சிக் கவி!

பாரதி யார்?- டிஜிட்டல் பின்னணியில் புரட்சிக் கவி!

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“அவன் எட்டயபுரத்து சுப்பையாவாகப் பிறந்தான். சுப்பிரமணிய பாரதியாக வளர்ந்தார்” பின்னணி குரல் ஒலிக்கிறது.

முறுக்கு மீசையும் முண்டாசுமாக மேடையில் தோன்றுகிறார் பாரதி. “உங்களுக்கு நான் எப்போதும் எட்டயபுரத்து சுப்பையாதான்” என்கிறார் கம்பீரமாக. அவர் முன்னே ராஜாவும் ராணியும் அவர்தம் பரிவாரங்களும். “இல்லையில்லை. நமது எட்டயபுரத்து சமஸ்தானத்தில்தானே சுப்பையாவாக இருந்து சுப்பிரமணிய பாரதியாக ஆனீர்?” ராஜாவின் குரல் ஒலிக்கிறது. “சரி, சுப்பையாவும் வேண்டாம்; சுப்பிரமணியமும் வேண்டாம். பாரதி இருக்கட்டும். பாரதிக்குள் பாரதி தேவியும் பராசக்தியும் சேர்ந்திருக்கிறார்கள்!” மீண்டும் கம்பீர முழக்கம். காட்சி மாறுகிறது. டைட்டில் கார்டு விழுகிறது. சூளும் இருள். பிறகு 
கவ்வும் வெளிச்சம்.

அதில் தோன்றும் பாரதி, பாடலாய் முழங்குகிறார்: “கார்த்திகைப் புயல், இது காளியின் நிழல். காற்றும் மழையும் சூழும் திக்குகளெட்டும் சிதறீ...!” அகல விரிக்கும் பாரதியின் கைகளில் பேராற்றல். ஒளிவிடும் கண்களில் தீட்சண்யம், அறிவுச்சுடர். “தகதீம், தகதீம், தரிகிட தீம், தரிகிட தீம்!”

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in