லெய்லா - எதிர்கால அபாயத்தை எச்சரிக்கும் இரவின் மகள்!

லெய்லா - எதிர்கால அபாயத்தை எச்சரிக்கும் இரவின் மகள்!

விக்கி
readers@kamadenu.in

2040-ம் ஆண்டு இந்தியா சர்வாதிகாரப் பிடியில் சிக்கினால்? அந்த சர்வாதிகாரி, மத வெறி பிடித்த அடிப்படைவாதியாக இருந்தால்? அப்படிப்பட்ட சூழலில் ஒரு தாய் தன் செல்ல மகளை மதவாத குண்டர்களிடம் இழந்தால்? தன் மகளை மீட்டெடுக்கப் போராடும் அந்தத் தாயின் பயணமே நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘லெய்லா' (Leila) குறுந்தொடர்.

2017-ல், பத்திரிகையாளர் ப்ரயாக் அக்பர் எழுதிய ‘லெய்லா’ நாவலைத் தழுவி அதே பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடர், ஜூன் 14-ல், நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. ஆறு எபிஸோடுகளை கொண்ட இந்தத் தொடரை புகழ்பெற்ற இயக்குநர் தீபா மேத்தாவுடன், ஷங்கர் ராமன், பவன் குமார் ஆகியோர் இணைந்து இயக்கியிருக்கிறார்கள். இந்தியா தாண்டி உலக அரங்கிலும் உச்சம் தொட்டிருக்கிறாள் ‘லெய்லா’.

தற்கால அரசியல் போக்குகளை வைத்து வருங்கால அரசியல் சூழல் எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்று கற்பனையாக எழுதும் ‘டிஸ்டோப்பியன்' வகை நாவல்கள் இந்தியாவுக்கு புதிது. 1949-ல், ஆங்கில இலக்கிய ஜாம்பவான் ஜார்ஜ் ஆர்வல் எழுதிய ‘நைன்ட்டீன் எயிட்டி ஃபோர்' என்ற நாவல் டிஸ்டோப்பியன் வகை நாவல்களுக்குச் சிறந்த முன்னுதாரணம். இக்கால அரசியல் சக்திகளின் அதிகாரப் போக்கு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நீடித்தால் அது நம் வருங்கால சந்ததியினரின் குரல்வளையை இறுக்கும் சங்கிலி ஆகிவிடும் என்று எச்சரிக்கை மணி அடிக்க இவ்வகை கதைகள் தவறுவதில்லை. இன்றைய அரசியல் சூழலில் அடித்திருக்கும் எச்சரிக்கை மணிதான் ‘லெய்லா’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in