ஒரு நாடோடியின் கனவு

ஒரு நாடோடியின் கனவு

ஜெ.சரவணன்
saravanan.j@kamadenu.in

கனவு எல்லோருக்கும் வரலாம். ஆனால், கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன என்பது மட்டும் யாராலும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த உளவியல் மேதையான சிக்மண்ட் ஃபிராய்ட் கனவுகளுக்கான விளக்கத்தைக் கண்டறியும் ஆராய்ச்சியில் தன் வாழ்நாளையே தியாகம் செய்தவர். ஆனால், அவருக்குப் பின்னால் வந்தவர்கள் அவருடைய பல கூற்றுகளைத் தவறு என்று வாதிட்டனர். ஏனெனில், கனவுகள் அந்த அளவுக்குக் குழப்பமானவை. ஆனால், அனுபவிக்க அலாதி
யானவை. எவரும் எத்தகைய வாழ்க்கையையும் வாழ முடியும் ஒரே இடம் கனவுலகம்தான்.

ஹென்றி ரூசோவின் ‘The Sleeping Gypsy’ ஓவியம் அப்படியான ஒரு கனவுலக அனுபவத்தைக் கண்முன் கொண்டு வருகிறது. கனவுகள் எப்படி எதையும் நேரடியாக உணர்த்துவதில்லையோ அதைப் போன்றதே இந்த ஓவியமும்.

ஒவியத்தில் பாலைவனத்தில் ஒரு கறுப்பின நாடோடிப் பெண் உறங்கிக்கொண்டிருக்கிறாள். பெண்ணின் அருகே இசைக்கருவி, வழிகாட்டி கோல், தண்ணீர் குவளை ஆகியவை உள்ளன. வானத்தில் அழகான வெள்ளை நிலா, பின்னே தூரத்தில் ஆறும் மலைகளும் உள்ளன. உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை ஒரு ஆண் சிங்கம் முகர்ந்து பார்க்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in