ரசிகா
readers@kamadenu.in
பாதி பத்மப்ரியா... மீதி வித்யா பாலன் என கலவையான தோற்றம் தந்து, ரசிகர்கள் மனதில் தொற்றிக் கொண்டிருக்கிறார் ரஜிஷா விஜயன். ‘கர்ணன்’ படத்துக்காக கேரளம் கொட்டிக் கொடுத்திருக்கும் புதிய கதாநாயகி. சன் டிவியின் மலையாள சேனல்களான சூர்யா டிவி, சூர்யா மியூசிக் இரண்டிலும் தொகுப்பாளினியாக புகழ்பெற்று பின்னர் மலையாள சினிமாவில் அறிமுகமானவர். மலையாளத்தில் 10 படங்களைக் கடந்துவிட்ட ரஜிஷா, தமிழுக்கு கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் தனுஷ் - மாரிசெல்வராஜ் என்ற வெயிட்டான கூட்டணி வழியாக அடி வைத்திருக்கிறார். ‘கர்ணன்’ படத்தின் பரப்புரைக்காக தமிழகம் வந்திருந்த ரஜிஷா, ‘காமதேனு’ மின்னிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டி இது.