மூன்று நாட்களாக கதறினேன்... கேட்க நாதியில்லை!- சுஜித் மீட்பு பணிகள் குறித்து பொன்ராஜ் பேட்டி

மூன்று நாட்களாக கதறினேன்... கேட்க நாதியில்லை!- சுஜித் மீட்பு பணிகள் குறித்து பொன்ராஜ் பேட்டி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி தொடர்பாக நிர்வாகத் தவறுகளை ஆரம்பத்திலேயே ஊடகங்களில் சுட்டிக்காட்டியவர் பொன்ராஜ். அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்தவர் இவர், மீட்புப்பணிக்கு உதவியாக பல தொழில்நுட்ப கருத்துக்களைத் தொடர்ந்து கூறிவந்தார். ஒரு கட்டத்தில் அதில் அதிருப்தியாகி நீதிமன்றத்தை நாடினார். இப்போது எல்லாம் முடிந்துவிட்ட நிலையில், சில உண்மைகளை அறிந்துகொள்ளும் விதமாக அவருடன் பேசினேன்.

சுஜித் விவகாரத்தில் நீங்கள் உள்ளே வந்தது எப்படி?

ஆழ்துளைக்கிணறுகள் பற்றி அடிக்கடி பேசிவருபவன் என்ற முறையில், செய்தித் தொலைக்காட்சியில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு கருத்து கேட்டார்கள். அதைத் தொடர்ந்து, நாடு முழுக்க எனக்குத் தெரிந்து என்னென்ன மாதிரியான மீட்புக்கருவிகள், மீட்புக்குழுவினர் இருக்கிறார்கள் போன்ற விவரங்களை எல்லாம் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிரத்தொடங்கினேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in