தொ.பரமசிவன்: பண்பாட்டின் வழி வரலாற்றை ஆய்ந்த அறிஞர்!

தொ.பரமசிவன்: பண்பாட்டின் வழி வரலாற்றை ஆய்ந்த அறிஞர்!

ஜெய்
readers@kamadenu.in

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவனின் மரணம், 2020-ல் நம்மை நிலைகுலைய வைத்த பேரிழப்புகளில் ஒன்று. எளிய வாசகர்கள் தொடங்கி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரைக்கும் பல்வேறு தரப்பினர் தொ.பரமசிவனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். அந்த அளவுக்குத் தன் ஆய்வின் மூலம் தமிழ்ப் பண்பாட்டுக்கு வலு சேர்த்தவர் தொ.ப.

புதிய பாதை வகுத்தவர்

சொல் வழக்குகள், நாட்டார் வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழகப் பண்பாட்டை தொ.ப பதிவுசெய்தார். அழகர் கோயில் குறித்த ஆய்வுதான் அவரது முதல் ஆய்வாகப் புத்தக வடிவம் கண்டது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்துக்காக அவர் மேற்கொண்ட ஆய்வு அது. புதுமைப்பித்தனைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. ஆனால், அவரது ஆய்வு வழிகாட்டி அவரை அழகர் கோயில் குறித்து ஆய்வு மேற்கொள்ளச் சொன்னார். அழகர் கோயில் ஆய்வைத் தொ.ப கையில் எடுத்தது அப்படித்தான். ஆனால், கோயில் தொடர்புடைய பொதுவான ஆய்வுகளைப் போல் அல்லாமல் அதிலும் தனித்தன்மையை அவர் வெளிப்படுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in