ரஜினி வரலேன்னா... தமிழக கட்சிகளின் தடாலடி நகர்வுகள்!

ரஜினி வரலேன்னா... தமிழக கட்சிகளின் தடாலடி நகர்வுகள்!

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

அகில உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கரோனா, தமிழகத்து அரசியல் களத்திலும் திகைக்கவைக்கும் திடீர் திருப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு திருப்பம் தான், “நான் அரசியல் கட்சி தொடங்கவில்லை” என்ற ரஜினியின் அதிரடி!

ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் கிளம்பும் போதெல்லாம், “இது தனது படத்தை ஓடவைக்க ரஜினி கையாளும் உத்தி” என துணைச் செய்திகளும் சிறகடிக்கும். கடந்த காலங்களில் இதில் ஓரளவுக்கு உண்மையும் இருந்தது. ஆனால், “என் உயிரே போனாலும் பரவாயில்லை... தமிழக மக்களுக்காக நான் அரசியலுக்கு வருகிறேன். டிசம்பர் 31-ம் தேதி, கட்சி தொடங்கும் நாள் குறித்து அறிவிப்பேன்” என்று டிசம்பர் 3-ல் ரஜினி திட்டவட்டமாக சொன்னார். இதனால் அவரைப் பற்றி மக்கள் மத்தியில் சித்தரிக்கப்பட்டிருந்த முந்தைய பிம்பம் முற்றாக மறைந்து போனது. ரஜினி வருகையை ரசிக்காதவர்கள் மட்டுமே, “அவரு நிச்சயம் வரப்போறதில்லை. அப்படியே வந்தாலும் தாக்குப்பிடிக்க மாட்டார்” என்று வம்படி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இரட்டிப்பு மகிழ்ச்சியில் திமுக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in