இணைய உலகம்!

இணைய உலகம்!

‘96’ படத்தில் ஜானகி அம்மா 


கடந்த வாரம் யூ டியூபில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ 96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி தான். இரண்டே நாளில் 20 லட்சத்துக்கும் மேலானோர் பார்த்துள்ளனர். அதில் பாடகி  எஸ்.ஜானகி வரும் காட்சி இடம்பெற்றுள்ளது. ராம் தனது பள்ளி காதலி ஜானுவை பாடகி ஜானகி வீட்டுக்கு அழைத்துப் போய் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் காட்சி அது. இந்தக் காட்சியை சமூக வலைதளத்தில் பார்த்த பலரும்,  “ஜானகி அம்மா நடித்த காட்சியை நீக்கி அவரை அவமானப்படுத்திவிட்டார்கள்” என்றனர்.  “படத்தின் நீளம் கருதி காட்சியைக் குறைப்பது ஒரு படைப்பாளியின் உரிமை என்பதை மறுக்கவில்லை. ஆனால், எஸ்.ஜானகி போன்ற மேதைகளைப் படைப்புக்குள் கொண்டு வரும்போது சரியான திட்டமிடல் வேண்டாமா?” என்றும் வாதிட்டனர். இன்னொரு தரப்பு,  “இந்தக் காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தால், படத்தின் மொத்த உணர்வே பாழாகியிருக்கும்” என்றனர். இப்படியாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in