ஆக்சிஜனுக்காக அல்லாடும் இந்தியா!

ஆக்சிஜனுக்காக அல்லாடும் இந்தியா!

நாடு முழுவதும் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றிய பேச்சுதான். இணையத்திலும் வெகு தீவிரமாக அரசுகளை நோக்கி கேள்விகளை முன்வைக்கிறார்கள் நெட்டிசன்கள். மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தெரியாமலேயே ஆக்சிஜன் ஒதுக்கீடுகளை மாற்றி மாற்றி அறிவிப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. குறிப்பாக, டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் சர்ச்சையாகி வருகிறது. இறந்தவர்களின் உடல்கள் மொத்தமாக எரிக்கப்படும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மட்டுமல்லாமல் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. அத்துடன், இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜன் யாருக்கு என்பதையும் மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் தமிழகத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசியல், பொருளாதார ஆதாயங்களுக்கு அப்பாற்பட்டு மக்களின் உயிரை கவனத்தில் கொண்டு அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. 

*********************

அனைத்திற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்! - மத்திய அரசு

ஜீ பதவியேத்த நாளில் இருந்தே அப்படித்தானே இருக்கோம்..!- மயக்குநன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in