கழக ஆட்சிகளை அகற்றும் ‘அதிசயம்’ - பாஜகவிடம் ரஜினி வைக்கும் கோரிக்கை!

கழக  ஆட்சிகளை  அகற்றும்  ‘அதிசயம்’ - பாஜகவிடம் ரஜினி வைக்கும் கோரிக்கை!

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

“இது ஒரு பாவமான ஆட்சி; தவறான ஆட்சி என்பதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த ஆட்சியை கலைத்துவிட்டு தமிழகத்தில் ஆறு மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி அனைத்தையும் சரிசெய்யுங்கள் என்கிறீர்கள். ஆறு மாதத்தில் தமிழகத்தை மாற்றிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், ரஜினி காந்த் வந்தால் அந்த மாற்றம் வரும். அரசியல் சாசனம் 356 -ஆல் மாற்றம் வராது. இவர்களை டிஸ்மிஸ் செய்து தோலுரித்துக் காண்பித்து திமுக வந்துட்டுன்னா என்ன செய்வது?” திருச்சியில் துக்ளக் விழாவில் அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசிய இந்தப் பேச்சு அதிமுகவை ஏகத்துக்கும் கலக்கமடையச் செய்திருக்கிறது.

அடுத்த அஜெண்டா

ஓபிஎஸ்ஸிடம் சொன்னதாக அந்த விழாவில், குருமூர்த்தி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு முதல்வரோ துணை முதல்வரோ இதுவரை வெளிப்படையாக வாய்திறக்கவில்லை. வழக்கம் போல அமைச்சர் ஜெயக்குமார் மட்டும் தனிப்பட்ட முறையில் ஆவேசப்பட்டார். இதற்கு பகிரங்க கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டிய ஓபிஎஸ்ஸோ, தனிப்பட்ட முறையில் குருமூர்த்தி தரப்பைத் தொடர்பு கொண்டு தனது ஆதங்கத்தைக் கொட்டினாராம். ‘நல்லாத்தானே போயிக்கிட்டு இருக்கு...’ பாணியில் ஈபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் அசிங்கப்படுவதை உள்ளுக்குள் ரசித்தபடி இந்த விஷயத்தை அமைதியாகவே கடந்துவிட்டது.

இந்த நிலையில், ‘‘தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ்ஸை குறிப்பிட்டு நான் அந்தக் கருத்தைச் சொல்லவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்களே என்ற அர்த்தத்தில்தான் அப்படிக் கேட்டேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் ஓபிஎஸ் மீதுதான் எனக்கு அதிக மரியாதை” என்று ட்வீட் போட்டு பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார் குருமூர்த்தி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in