பாலில் அபாயம்... பயமுறுத்தும் தழிழகம்!

பாலில் அபாயம்... பயமுறுத்தும் தழிழகம்!

பாலின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து இந்திய அளவில் ஒரு ஆய்வறிக்கை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.  நாடு முழுவதிலும் இதற்கென எடுத்துக்கொண்ட பால் மாதிரிகளில், 93 சதவீதம் மனிதப் பயன்பாட்டுக்கு ஏற்றதாகவே இருப்பதாகச் சொல்லி இருக்கும் இந்த ஆணையம், தமிழகம், டெல்லி மற்று கேரளம் ஆகிய மாநிலங்களில் குறித்து கவலை தரும் தகவலைச் சொல்லி இருக்கிறது!

இதுதொடர்பாக மக்களவையில் விளக்கமளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபேவும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட 551 மாதிரிகளில், 88-ல் ‘அஃப்லடாக்ஸின் எம்-1’ என்ற வேதிப்பொருள் - பாலைப் பதப்படுத்துவதற்காக - அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கலக்கப்பட்டிருப்பதாகத்  தெரியவந்திருக்கிறது. ஒரு கிலோ  உணவுப் பொருளில் ஒரு மில்லி கிராமுக்கு மேல் இந்த ‘அஃப்லடாக்ஸின் எம்-1’ கலந்திருந்தால் அது கல்லீரல் செயலிழப்பு, மஞ்சள் காமாலை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம என்பது உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை!

இந்நிலையில், ஆவின் பாலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக நச்சுத்தன்மை இல்லை என்று கூறியிருக்கும் தமிழக அரசு, தனியார் பால் நிறுவனங்களின் தயாரிப்புகள் பரிசோதிக்கப்படும் என்கிறது. 

பரிசோதனையைக் கடுமையாகவும், நேர்மையாகவும் நடத்துவதோடு...  ஆவின் பாலையும் இந்தச் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்.  ஆரோக்கியத்துக்காக மக்கள் நம்பிப் பயன்படுத்தும் பாலில், இத்தகைய வேதிப் பொருளின் கலப்பு வரம்பு கடந்து போனதன் பின்னணியையும் கண்டறிந்து, அதை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். தக்க நடவடிக்கையும் தயக்கமின்றி எடுக்கப்பட வேண்டும். 

இல்லையேல், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in