ஆவுடையப்பனுக்கு வந்த சோதனை

ஆவுடையப்பனுக்கு வந்த சோதனை

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனுக்கு ஞாபக மறதி அதிகம் என்பார்கள். சமயங்களில், தனக்கு நெருக்கமான கழகக் கண்மணி களின் பெயர்களையே மறந்துவிட்டு சமாளிப்பது அண்ணாச்சியின் வழக்கம். தேர்தல் தோல்விக்குப் பிறகு இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு சில பேர் அண்ணாச்சியை படுத்தி எடுக்கிறார்களாம். கட்சி நிர்வாகிகள் சிலரும், குதர்க்கமான மீடியா பார்ட்டிகளும் ஏதாவது அவசரத்துக்கு அண்ணாச்சி போன் போட்டால், “யாரு... எந்த ஆவுடைய அப்பன்? சைக்கிள் கடை ஆவுடையப்பனா?” என்று அவருடைய பாணியில் கேட்டு அவரைப் பழிவாங்குகிறார்களாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in