அதிமுகவினரை வளைக்க அறிவாலய டீம்!

அதிமுகவினரை வளைக்க அறிவாலய டீம்!

கரோனா தொற்றிலிருந்து மீண்டாலும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உடல்நிலை பாதிப்பிலிருந்து இன்னும் முழுவதுமாக மீளவில்லை என்கிறார்கள். இந்த நிலையில், டெல்டா அதிமுகவில் வைத்திலிங்கத்தின் செல்வாக்கைக் குறைக்க ஸ்பெஷல் டீம் ஒன்றை தஞ்சைக்கு அனுப்பி இருக்கிறதாம் திமுக தலைமை. அதிருப்தியில் இருக்கும் அதிமுக பெருந்தலைகளிடம் ஆறுதலாகப் பேசி அவர்களை திமுகவுக்கு இழுப்பதுதான் இந்த டீமின் வேலையாம். அப்படித்தான், தஞ்சையின் முன்னாள் எம்பி-யான பரசுராமனையும் தஞ்சை நகர முன்னாள் அதிமுக செயலாளர் பண்டரிநாதனையும் வளைத்ததாம் இந்த டீம். விவரம் தெரிந்து பதறிய வைத்தி, “அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துடாதீங்க... எனக்காகவாச்சும் நீங்க கட்சியில இருக்கணும்” என்று சமாதானம் பேசினாராம். ஆனாலும் இருவரும் அறிவாலய பிரவேசத்தில் அழுத்தமாக இருந்ததால் பரசுராமன், பண்டரிநாதன் உள்ளிட்ட ஐந்து நபர்களை அதிரடியாகக் கட்டம் கட்டிவிட்டது அதிமுக தலைமை. இப்போது இவர்களை வைத்தே தஞ்சை அதிமுகவில் இன்னும் பலரை தங்கள் பக்கம் இழுக்கும் ஆட்டத்தைத் தொடங்கியிருக்கிறது ஆபரேஷனில் இருக்கும் அறிவாலய டீம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in