கனா பேச்சு 7- இரண்டாம் மரணம்

கனா பேச்சு 7- இரண்டாம் மரணம்

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

கலியனுக்கு கலியன் என்று பெயர் வைத்தது அவன் படுத்திருக்கும் சின்ன நைனா வீட்டுத் திண்ணையைத் தாண்டிச் செல்லும் பள்ளி மாணவர்கள்தான். அப்பள்ளிப் பருவத்தில்தான் எனக்கும் கலியன் அறிமுகமானார். வயது காரணம் காட்டி ர் விகுதி என்றாலும் மனப்பிறழ்வு மனிதனுக்கான அடையாளமாய் கலியன் ன் விகுதியில்தான் அடங்குவான். 30 லிருந்து 35 வயதுக்குள் இருக்கும் கலியன் ஒல்லியான உருவம். அடைஅடையாய் உடம்பெங்கும் அப்பிய அழுக்குடன் சின்ன நைனா வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பான் முழு நிர்வாணமாய்.

காட்டுக்குள் வாழும் தவ முனிகளுக்கு மட்டுமே சாத்தியம் என்று நம்பிக்கொண்டிருந்த ஜடா முடியை கலியனிடம் கண்டு அசந்திருக்கிறேன். குளிக்காமல் தலையில் எண்ணெய் வைக்காமல் பல வருட காலம் இருந்தால் இப்படித்தான் சிக்கு 
பிடித்து ஆலமர விழுது போல பாம்பு பாம்பாக தலை முடி சுருண்டு தொங்கும் என்பதை கலியன் மூலமாகத்தான் தெரிந்துகொண்
டேன். குறிப்பிட்ட தூரம் வைத்திருப்பான் கலியன். சின்ன நயினா வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று திரும்புவான். வேறெங்கும் செல்ல மாட்டான். ஒட்டுத் துணியின்றி முழு நிர்வாணமாய் தளர்ந்த குறியுடன் சாலையைக் கடந்து செல்லும் கலியன் குறித்து அந்த அரை கிலோ மீட்டர் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மனிதர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை. கலியன் உருவாக்கிக்கொண்ட சித்திரம் அப்படி.

தன் வீட்டு சிமென்ட் திண்ணையில் மலம் கழித்து வைக்கும் கலியன் குறித்து சின்ன நயினாவுக்கு எவ்வித அருவருப்புமில்லை. குடம் தண்ணீரைக் கொண்டு வந்து கலியன் மீதும் கழிவின் மீதும் ஊற்றிவிட்டுச் செல்லும் சின்ன நயினா அது குறித்து எவ்வித முகச் சுளிப்பும் காட்டியதில்லை. இவ்வளவுக்கும் மார்கழி மாதம் முழுவதும் பெருமாள் கோயிலே கதி என்று கிடக்கும் சின்ன நயினா ஆச்சார அனுஷ்டானங்களைக் கடுமையாக கடைப்பிடிப்பவர்தான். புருவ மத்தியில் குங்குமம் இன்றி வீதிக்கு வராத சின்ன நயினா கலியனை மட்டும் எதற்கு சகித்துக்கொண்டார்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in