ட்ரம்பின் வருகை யாருக்கு லாபம்?

ட்ரம்பின் வருகை யாருக்கு லாபம்?

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்து சென்றிருக்கும் ட்ரம்ப், அமெரிக்காவில் தரையிறங்கிய கையோடு, “இந்திய சுற்றுப்பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது” என்று உற்சாகமாக ட்வீட் செய்திருக்கிறார்.

“இந்தியாவுக்கு வந்தமைக்கு நன்றி. இரு தரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் நாம் சிறப்பான முறையில்செயல்பட்டிருக்கிறோம்” என்று பிரதமர் மோடியும் ட்விட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

2019-ல், அமெரிக்காவில் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியின் போது, இந்தியாவுக்கு வருகை தருமாறு மோடி விடுத்த அழைப்பை
ஏற்றுக்கொண்ட ட்ரம்ப், தனது மனைவி மெலோனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேரட் குஷ்னர் சகிதம், அதிகாரிகள்
புடைசூழ இந்தியா வந்து சென்றிருக்கிறார். இந்தப் பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்த வாதப் பிரதிவாதங்களைத் தாண்டி, இந்திய மண்ணில் இருந்தபடியே பாகிஸ்தானுக்குப் பாராட்டு, டெல்லி வன்முறை குறித்து மேம்போக்கான கருத்து என்று பேசி வேறு சில விவாதங்களையும் கிளப்பியிருக்கிறார் ட்ரம்ப்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in