பிள்ளைகளுக்குக் கல்யாணம்...  ஏழைகளுக்கு மனை தானம்! - நிறைந்த மனதில் சிறந்த சேவை

பிள்ளைகளுக்குக் கல்யாணம்...  ஏழைகளுக்கு மனை தானம்! - நிறைந்த மனதில் சிறந்த சேவை

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

திருமண விழாவுக்கு வருபவர்களுக்குத் தாம்பூலப் பை கொடுத்து அனுப்புவது பொதுவான வழக்கம். வசதி படைத்தவர்கள் கொஞ்சம் காஸ்ட்லியான பொருட்களை அன்புப் பரிசாக அளிப்பதுண்டு. ஆனால், தனது பிள்ளைகளின் திருமணத்தை ஒட்டி, ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகளை வழங்குகிறார் கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முண்டக்கயம் கிராமத்தைச் சேர்ந்த அஸீஸ். மதமாச்சாரியங்களைக் கடந்து சொந்த ஊர் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த நினைத்த அந்த வள்ளலை அவரது கிராமத்தில் சென்று சந்தித்தேன்.

“வெளிநாட்டில் வேலை செஞ்சு, சில வருஷங்களுக்கு முன்னால ஊர் திரும்பினேன். சின்ன வயசில இருந்தே என்னால முடிஞ்ச அளவுக்கு சமூக சேவை செய்யணும்னு ஆசை. சின்னச் சின்னதா உதவியிருந்தாலும், பெரிய அளவுல ஏழைகளுக்கு உதவி செய்யணும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன். எனக்கு ஒரு பையன். பேரு நவீத். பொண்ணு நாசியா. ரெண்டு பேருமே டாக்டர்ஸ். ரெண்டு பேருக்கும் வரன்கள் பார்த்து, ஒரே மாசத்துல தனித் தனி தேதியில கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு ப்ளான் பண்ணினேன்.

எல்லாம் சரியா அமைஞ்சுட்டதால பசங்க கல்யாணத்த வெச்சு மனசுக்கு நிறைவா ஒரு காரியம் செஞ்சா என்னன்னு தோணுச்சு.

முதல்ல, ஏழைப் பொண்ணுங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னனு நினைச்சேன். ஆனா, அதைவிட ஏழைகளுக்கு இலவச மனை கொடுத்தால் அவங்க வாழ்க்கையே நல்லபடியா அமையுமேன்னு என் மனைவியும் பிள்ளைகளும் சொன்னாங்க. இதைவிட நல்ல யோசனை இருக்க முடியாதுன்னு உடனடியா காரியத்துல இறங்கிட்டேன்” என்கிறார் அஸீஸ்.

முஸ்லிம் லீக் கட்சியின் கோட்டயம் மாவட்டத் தலைவராக இருக்கும் அஸீஸ், முதற்கட்டமாக முண்டக்கயம் பஞ்சாயத்தில் உள்ள மூன்று சிறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தனது வாரிசுகளின் திருமண நிகழ்வை ஒட்டி, நிலம் இல்லாத ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்கப்படும் என்றும், தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார். விண்ணப்பங்கள் வந்ததும் உடனடியாகச் செயலில் இறங்கினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in