இழுத்த ஈபிஎஸ்... எதிர்த்த ஓபிஎஸ்! - தங்கம் தடம் மாறிய கதை!

இழுத்த ஈபிஎஸ்... எதிர்த்த ஓபிஎஸ்! - தங்கம் தடம் மாறிய கதை!

குள.சண்முகசுந்தரம்/கே.கே.மகேஷ்
readers@kamadenu.in

ஆண்டிபட்டி தொகுதியை ஜெயலலிதாவுக்காக விட்டுக்கொடுத்து தேனி மாவட்டத்தில் அவரது செல்லப்பிள்ளையாகவே வலம் வந்த தங்கதமிழ்ச் செல்வனை, அறிவாலய வாசலில் நின்றுகொண்டு, “ஆளுமை மிக்க ஒரே தலைவர் தளபதி ஸ்டாலின்” 
என்று முழங்க வைத்திருக்கிறது அதிகார அரசியல்!

என்ன பிரச்சினை?

தேனி மாவட்ட அரசியலில் ஓபிஎஸ்ஸின் பரம வைரியாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து தினகரன் வெளியேற்றப்பட்ட போது அவரது பிரதான தளபதியாக உயர்ந்தார். 2018-ல், அமமுக உதயமானதும் அதன் கொள்கைப் பரப்புச் செயலாளரும் ஆனார். அதன் பிறகு அடிக்கடி ஊடக வெளிச்சம் பட்டு இன்னும் பிரபலமானார் தங்கம். பல நேரங்களில் தலைமையின் எண்ண ஓட்டம் தெரியாமல் அதற்கு மாறான தன்னுடைய கருத்தை ஓங்கிப் பேசுவதும், அதற்காக தினகரன் அவரை அழைத்துக் கண்டிப்பதும் தொடர் நிகழ்வாகிப்போனது.

அமமுகவில் தான் மட்டுமே பிரதானம் என நினைத்த தினகரன், சசிகலாவையே மெல்ல மெல்ல ஓரங்கட்டினார். அப்படிப்பட்டவ
ரால் தங்கத்தின் ஏட்டிக்குப் போட்டிகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும், அவரை ஓரங்கட்ட முடியாமல் தவித்தார். “அந்த 18 எம்எல்ஏ-க்களும் என்னை நம்பி வந்தவர்கள். எந்தச் சூழலிலும் அவர்களைச் சங்கடப்படுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கமாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இருவரது போக்கிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டன. ஒருவரை ஒருவர் சகித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது போலவே நடந்துகொண்டார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in