முடிவை அவர்கள் எடுக்கட்டும்!

முடிவை அவர்கள் எடுக்கட்டும்!

வேட்பு மனு தாக்கல் வைபவங்கள் எல்லாம் முடிந்து தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. வேட்பாளர்களும் கட்சித் தலைவர்களும் தூக்கம் மறந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலில் சமூக வலைதளங்களின் தாக்கம் என்பது தேர்தல் முடிவுகளையே மாற்றி எழுதும் அளவுக்குப் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்கின்றன. அதனால்தான் அனைத்து முக்கியக் கட்சிகளுமே தங்களின் தொழில்நுட்ப பிரிவைத் தூங்காமல் வைத்திருக்கின்றன.

சமூக வலைதளங்கள் தேர்தலுக்கான சரியான பிரச்சார ஊடகம்தான். ஆனால், அவற்றில் பரப்பப்படும் தகவல்களும் பிரச்சாரங்களும் எந்தளவுக்கு நம்பகத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன? சொல்லப்போனால், ஒரு கட்சிக்கு சார்பாகவோ அல்லது குறிப்பிட்ட ஒரு வேட்பாளருக்கு பாதிப்பை உண்டாக்கும் விதத்திலோ சித்தரிக்கப்பட்ட வீடியோக்களையும், பதிவுகளையும்தான் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

ஒருவேளை, இத்தகைய பதிவுகளை உண்மை என்று நினைக்கும் பட்சத்தில் தாங்கள் வாக்களிக்கப் போகும் வேட்பாளரைப் பற்றிய எண்ணமே வாக்காளர்களுக்கு மாறலாம். இதுபோன்ற பதிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தால், உண்மையிலேயே தகுதியான வேட்பாளருக்கு வாக்களிக்கும் வாய்ப்பை நாம் தவறவிடலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in