காசியில் நரேந்திரன்... ராமேஸ்வரத்தில் நாகேந்திரன்!- மதக்கலவர அபாயத்தில் ராமநாதபுரம்!

காசியில் நரேந்திரன்... ராமேஸ்வரத்தில் நாகேந்திரன்!- மதக்கலவர அபாயத்தில் ராமநாதபுரம்!

கே.கே.மகேஷ்

இது தமிழ்நாடுதானா... இல்லை வட இந்தியாவுக்கு ஏதும் வந்துவிட்டோமா என்று எண்ண வைக்கிறது ராமநாதபுரம் தேர்தல் களம். அந்தளவுக்கு மக்களவைத் தேர்தலுக்குள் மதத்தை புகுத்தி இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் போல மாற்றிவிட்டார்கள் அரசியல்வாதிகள்!

சமூக வலைதள விஷமம்

திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் கா.நவாஸ்கனியின் முகநூல் பக்கத்தில், நடக்கிற விஷமங்களைப் பார்த்தால் பீதி கிளம்புகிறது. “கமுதி, முதுகுளத்தூர், கடலாடி வழியாக குமரி முதல் காரைக்குடி வரையில் புதிய ரயில் பாதை அமைப்போம்” என்பது தொடங்கி மீனவர் நலன், வேலைவாய்ப்பு குறித்த பல வாக்குறுதிகளைப் பதிவிட்டிருந்தார் கனி. இவர் முஸ்லிம் லீக் கட்சியின் பிறைக்கொடியை தனது பிரச்சாரத்தில் பயன்படுத்துகிறார். இதைத் தவறாகப் புரிந்துகொண்ட ஒருவர், “எல்லாம் சரி, ஏன் பாகிஸ்தான் கொடியைப் பயன்படுத்தி ஓட்டு கேட்குறீங்க?” என்று கமென்ட் போட்டார். இதைத் தொடர்ந்து வந்த சுமார் 50, 60 கமென்ட்கள் மத ரீதியானவை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in