கர்ணனின் ‘கண்டா வரச் சொல்லுங்க’

கர்ணனின் ‘கண்டா வரச் சொல்லுங்க’

தொகுப்பு: ஜெ.சரவணன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ திரைப்படம், ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இதன் சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியானது. நாட்டுப்புறக் கலைஞர் கிடக்குழி மாரியம்மாள் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். இவர், பாடகி சின்னப்பொண்ணுவின் உறவினர். மேடைகளில் பாடியிருந்தாலும் இதுதான் இவருக்கு முதல் சினிமா பாடல். முதல் பாடலிலேயே அநேக கவனத்தைப் பெற்றுவிட்டார். பாடல் வெளியான சில நாட்களிலேயே பல மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் சமயம் என்பதால், இந்தப் பாடலுக்கு கலைஞரை வைத்து வீடியோ தயார் செய்து வெளியிட்டுள்ளனர் திமுகவினர். மறுபக்கம் பாமக ராமதாஸ் போன்றவர்களைக் கிண்டல் செய்யும் விதமாகவும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் இணையத்தில் தொடர்ந்து வைரலாகிவருகிறது. 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா.- செய்தி
பாருவே... திமுகவிலும் பிஜேபி ஸ்லீப்பர் செல் இருந்திருக்காங்க!- ரஹீம் கஸாலி

ஸ்டாலினால் எந்தக் காலத்திலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது!- எல்.முருகன்
நீங்க தமிழகத்தில் ‘நோட்டா'வை வெல்ல முடியாதே... அந்த மாதிரியா ஜி?- தர்ம அடி தர்மலிங்கம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in