சமயம் வளர்த்த சான்றோர் 11: பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

சமயம் வளர்த்த சான்றோர் 11: பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்

கே.சுந்தரராமன்
sundararaman.k@hindutamil.co.in

சம்ஸ்கிருதம், தமிழ் மொழி இரண்டிலும் புலமை பெற்று, முருகப் பெருமானை வழிபட்டவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்.
தனது வாழ்நாள் முழுவதும்  சைவநெறியாகிய குகப்ரம்ம நெறியை தனது பாடல்கள் மூலம் தழைத்தோங்கச் செய்த பாம்பன்  சுவாமிகள் இயற்றிய சண்முகக் கவசம் மிகவும் புகழ் பெற்றதாகும். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் வழியில் சித்திரக் கவிகளையும் இவர் எழுதியுள்ளார்.  

ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பனில் வசித்த சாத்தப்பப் பிள்ளை – செங்கமலம் தம்பதிக்கு (1848-50-ம் ஆண்டு காலகட்டத்தில்) மகனாகப் பிறந்தவர் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள். இவரது இயற்பெயர் அப்பாவு. பிறந்த ஊரின் நினைவாக பாம்பன் சுவாமிகள் என்றே பின்னாட்களில் அழைக்கப்பட்டார்.  

சிறுவயது முதலே படிப்பில் ஆர்வம் கொண்ட அப்பாவு, முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழும், சேது மாதவ அய்யர் என்பவரிடம் சம்ஸ்கிருதமும் கற்றார். 1866-ல் உள்ளூரில் உள்ள கிறித்தவப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவருக்கு கந்தர் சஷ்டி கவசம் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. அதன் காரணமாக தினம் 36 முறை கந்தர் சஷ்டி கவசத்தை ஓதுவார்.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in