ஓ.டி.டி-யில் சினிமா பார்க்கும் சின்னம்மா!

ஓ.டி.டி-யில் சினிமா பார்க்கும் சின்னம்மா!

சானா
readers@kamadenu.in

பாச்சா பதற்றத்தில் இருந்தான். பக்கத்து டீக்கடையில் டீயும் வடையும் வாங்கிவரச் சென்றிருந்த பறக்கும் பைக், அரை மணி நேரமாகியும் வரவில்லை. பொறுமையிழந்து சட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பியவன், வாசலில் சாவகாசமாக பிரேக் போட்ட பைக்கைக் கண்டதும் பொங்கியெழுந்தான்.

“சோம்பேறி! ‘வலிமை’ அப்டேட் கூட இந்நேரம் வந்திருக்கும்டா. நீ வடையும் டீயும் வாங்கிட்டு வர்றதுக்கே வருஷக்கணக்குல லேட் பண்ணிட்டு இருக்கே...” என்றான் சூடாக.

என்ன கேள்வி கேட்டாலும் வருத்தமே இல்லாமல் பதில் சொல்லும் எல்.முருகன் போல சிரித்தபடி வாய்திறந்த பைக், “கொஞ்சம் கூலாவுய்யா! டீக்கடைப் பையன் பக்கத்துத் தெருவுக்குப் பொருள் வாங்கப் போயிருந்தானாம். வர்றதுக்கு லேட்டாகிடுச்சு… டீக்கடைக்காரர் கேட்டா, ‘கப்பல்லதான் டீத்தூள் வருது. அதான் வெயிட் பண்ணி வாங்கிட்டு வர்றேன்’னு சொல்லிருக்கான். கடைக்காரர் கடுப்பாகி அவனைக் காய்ச்சி எடுத்துட்டார்” என்று மீண்டும் சிரித்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in