பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

 கோவை

மருத்துவக் கல்லூரி அருகில்...
“ஏண்ணே… நீங்கதான் அரசியல் அப்டேட்ல கிங் ஆச்சே! இந்த எலெக்‌ஷன்ல யாரு வருவாங்கன்னு சொல்லுங்க...”
“உன் கேள்வியே தப்பு. யாரு போவாங்கன்னுதான் கேட்கணும்!”
“சரி, யாரு போவாங்க?”
“யாரு வரமுடியலையோ அவங்கதான் போவாங்க... இது என்ன கேள்வி?”
“ம்க்கும்… காலையிலேயே ‘கடை’ பக்கம் போய்ட்டு வர்ற ஆள்னு தெரிஞ்சும், உங்ககிட்ட கருத்துக் கணிப்பு கேட்டேன் பாருங்க… என்னைத்தான் நொந்துக்கணும்.”
“அவசரப்படாதே தம்பி. இன்னும் ஒரு ரவுண்டு மிச்சமிருக்கு. போய்ட்டு வந்துட்டு தெளிவாச் சொல்றேன். இங்கேயே இரு...”
(முதலாமவர் மெல்ல நழுவுகிறார்)
- பா.சக்திவேல், கோயம்புத்தூர்

 தஞ்சாவூர்

காய்கறி மார்க்கெட்டில் ஆளுங்கட்சிக்காரரும் கடைக்காரரும்...
“என்னப்பா சொல்றே… சின்ன வெங்காயம் நூறு ரூபாயா?!"
“என்னண்ணே ஷாக் ரியாக்‌ஷன் கொடுக்கிறீங்க…? எல்லாத்துக்கும் உங்க கவர்மென்ட்டும், உங்க கூட்டணிக் கட்சி கவர்மென்ட்டும்தான் காரணம்னு ஊரே சொல்லுது...”
“அட நான் சொல்ல வந்ததே வேற. வேற ஸ்டேட்ல எல்லாம் இருநூறு, முந்நூறுன்னு விலை எகிறிடுச்சு. நாம நூறுக்கே கொடுக்க முடியுதேன்னுதான் ஆச்சரியப்பட்டேன்.”
“நல்லாவே சமாளிக்கிறீங்க!? நல்லா ஞாபகம் வெச்சுக்கோங்கண்ணே… வெங்காயத்திலேயே கை வெச்சீங்கன்னா… பெண்கள் தேர்தல்ல உரிச்சு கண்ணீர் விட வெச்சிடுவாங்க பார்த்துக்குங்க.”
- தே.ராஜாசிங்ஜெயக்குமார், தஞ்சாவூர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in