வந்தாங்க பாரு வைரஸ் அம்மிணி!

வந்தாங்க பாரு வைரஸ் அம்மிணி!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

ஹால்ல அம்மிணி சவுண்டு கேட்டுச்சு. “ஒங்கப்பாரு எங்கடா” மகனார் ஏதோ பதிலுக்கு முனகினாரு. பால்கனிப்பக்கம் உக்காந்து லேப்டாப்ல மெயில் பார்த்துட்டிருந்தேன். “இங்கே இருக்கேம்மா...” நானாவே முந்திக்கிட்டு பதில் சொன்னேன்.

“பொழுதனிக்கும் ஆபிஸ்ல அதே டொக்கு டொக்கு. வீட்டுக்கு வந்தாலும் அதே டொக்கு டொக்கு. என்ன கம்பியூட்டரோ சனியன்”னு திட்டுனாங்க. கடைசியா சொன்னது கம்பியூட்டரையா என்னையான்னு எனக்கு டவுட்டே வரல.

மெயில் பார்க்கிறது அலுத்துப் போக ஒரு சேஞ்சுக்கு பேஸ்புக் பாக்கலாம்னு அங்கே போனேன். நண்பர் ஒருத்தரோட பதிவுல, ‘அவசியம் பார்த்தே தீர வேண்டிய வீடியோ’ன்ற குறிப்போட சாதுவா ஒரு லிங்க் இருந்துச்சு.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in