நாங்கள் துரோகத்தால் வீழ்ந்தோம்..!- நாராயணசாமி பேட்டி

நாங்கள் துரோகத்தால் வீழ்ந்தோம்..!- நாராயணசாமி பேட்டி

கரு.முத்து
readers@kamadenu.in

புதுச்சேரியில், தனது தலைமையிலான கூட்டணி அரசு திட்டமிட்டு காய்நகர்த்திக் கவிழ்க்கப்பட்டதில் பெரும் சோகத்தில் இருக்கிறார் முன்னாள் முதல்வர் நாராயணசாமி. பிப்ரவரி 22-ம் தேதி சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்மீது நாராயணசாமி பேசிமுடித்ததும், அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். அதையடுத்து, தங்கள் ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் வெளியேறியவரை செய்தி யாளர்கள் தடுத்துநிறுத்தி கேள்விகேட்க முயற்சித்தனர். யாருக்கும் நின்று பதில் சொல்ல அவர் விரும்பவில்லை. நேராக, ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்றார். அங்கே, துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார். அங்கும், ஒருசில வார்த்தைகளை மட்டும் பேசிவிட்டு நேராக தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆதரவாளர்கள், கட்சியினர் மற்றும் செய்தியாளர்கள் தன்னைச் சந்திக்க வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் விடாப்பிடியாக இல்லம்வரை சென்று தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், தனது நிலையை பகிர்ந்துகொள்ளவும் அவர் தயங்கவில்லை. அத்தகைய இக்கட்டான மனநிலையில் அவர் என்னிடமும் சில நிமிடங்கள் பேசினார். அவருடனான அந்த உரையாடலில் இருந்து...

உங்கள் ஆட்சி கவிழ உண்மையில் யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியை கலைக்க நாலே முக்கால் ஆண்டு காலமாக பாஜக முயற்சித்து வந்தது. எப்போது கிரண்பேடியை இங்கு அனுப்பினார்களோ, அப்போதே ஆட்சியைக் கவிழ்க்கும் வேலைகளும் தொடங்கிவிட்டன. அதனால் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முழு பொறுப்பும் மத்திய பாஜக அரசையே சேரும். மத்தியில் அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருக்கிறது என்பதால் எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலத்திலும் ஆட்சியை கவிழ்ப்பதையும், தங்களுடைய அல்லது தங்களுக்கு சாதகமான ஆட்சியை கொண்டுவருவதையும் அவர்கள் முழுநேர வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in