பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

சென்னை

டாஸ்மாக் பாரிலிருந்து வெளிவரும் இரு குடிமகன்கள்...
“தல... இனிமேட்டுக்கு டாஸ்மாக்ல நம்மளை யாரும் ஏமாத்த முடியாது! சரக்கு வாங்குனவங்களுக்கு இனி ரசீது கொடுத்தே ஆகணும்னு ஹைகோர்ட் கண்டிஷனா சொல்லிடுச்சு.”
“சரியாப் போச்சு போ! நாமெல்லாம் 
சரக்கடிச்சா வேட்டியே இடுப்புல இருக்காது... இதுல ரசீதை எப்படி பத்திரப்படுத்தப் போறோம்? தவிர சரக்கு அடிச்ச பில் என் சம்சாரம் கையில கிடைச்சுடுச்சுன்னா கதை கந்தலாகிடுமே...”
“ம்க்கும்! அடிக்கிற சரக்குல அஞ்சடி தூரத்துல வர்றவங்களுக்கே ஸ்மெல் அடிச்சிடும். இதுல ரசீதை வச்சித்தான் கண்டுபிடிக்கிறாங்களாம்… காமெடி பண்ணாத தல!”
- எ.எம்.எம்.ரிஸ்வான், சென்னை

மதுரை

உணவகம் ஒன்றில், பேரனுடன் வந்த முதியவரும், கடைக்காரரும்...
“கடைக்காரரே... அது பேரு என்ன? சர்வமாய சிக்கனோ... சர்வதேச சிக்கனோ… அதுல ஒண்ணு கொடுங்க.”
(பேரன் சிரித்தபடி) “தாத்தா! அது... ஷவர்மா சிக்கன்..."
“என்ன கர்மமோ... பேரே வாயில நுழையலை. இதை எப்படித்தான் இதுங்க சாப்பிடுதுங்களோ? நாட்டுக் கோழிக் குழம்பெல்லாம் இங்க கிடைக்காதா?”
(கடைக்காரர் சிரிப்பை அடக்க முடியாமல்…) “பெரியவரே... கோழிக் குழம்பெல்லாம் உங்க காலம். இப்ப எல்லாம் ஃபாரின் ஸ்டைல்தான். கோழி எல்லாம் ஒண்ணுதான். பக்குவம்தான் வேற...”
(கடைக்காரரும் பேரனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்கிறார்கள்)
- எம். விக்னேஷ், மதுரை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in