இசை வலம்: ஆரி வேற மாறி!

இசை வலம்: ஆரி வேற மாறி!

வா.ரவிக்குமார்
ravikumar.cv@hindutamil.co.in

‘பிக் பாஸ்’ வெற்றியாளர் ஆரிக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவரது புகழ்பாடும் பாடலும் வெளியாகியிருக்கிறது. இறுதிச் சுற்றில் ஆரி நுழைவதற்கு முன்பே ‘ஆரி வேற மாறி’ எனும் பாடலுக்கு இசையமைத்து யூடியூபில் வெளியிட்டார் திரை இசையமைப்பாளர் சி.சத்யா. அருண் பாரதி, நட்டுராஜா ஆகியோர் பாடலை எழுதியிருக்கின்றனர். ஏகே சவுன், ஆர்ஜே புருஸ் ஆகியோர் சொல்லிசைக் கலைஞர்களாக இதில் பங்கெடுத்திருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்தபோது, சக போட்டியாளர்கள் ‘இம்’ என்றால் அறிவுரை சொல்வது… `ஏன்’ என்றால் அறத்துடன் கோபப்படுவது என்று தனிவழியில் விளையாடி கவனம் ஈர்த்த ஆரி, ஜல்லிக்கட்டுப் போராட்டம் உட்பட சமூக அநீதிக்கு எதிரான பல போராட்டங்களில் பங்கெடுத்தவர். தனியொரு ஒருவனாய்… தன்னம்பிக்கைத் துணைவனாய்... தனித்தன்மையோடு ஆரி இருப்பதைப் பெருமிதத்துடன் பதிவுசெய்கிறது இந்தப் பாடல்!

பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=DrsuoZhGlD0

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in