ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப் பெருமையாக இருக்குது!

ஒரு பொம்மலாட்டம் நடக்குது ரொம்பப் பெருமையாக இருக்குது!

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

நவராத்திரி நெருங்கிவிட்டது. நவராத்திரி என்றாலே, கொலு பொம்மைகள்தான் நினைவுக்கு வரும். பஜனைப் பாடல்களும் தான். அது மட்டுமா? வில்லுப் பாட்டு, பொம்மலாட்டம் என்று 9 நாட்களும் நிகழ்த்துக் கலைகள் மக்களைக் கொண்டாட்டத்தில் வைத்திருக்கும். நவராத்திரியின்போது மட்டுமல்ல, ஊர்த் திருவிழாக்களிலும் பொம்மலாட்ட நிகழ்வுகளைப் பார்க்க முடியும்.

இன்றைய நவீன யுகத்தில், ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களையும் பாடல்களையும் ஒலிக்கவிட்டு, அதற்கேற்ப பொம்மை
களை நூல் கட்டி ஆடவைப்பதுதான் பொம்மலாட்டம் என்றாகிவிட்டது. ஆனால், சமீபத்தில் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் ‘களரி கூத்துப்பட்டறை’ நடத்திய பொம்மலாட்டம், அச்சு அசலான நிகழ்த்துக் கலை அனுபவத்தைத் தந்தது.
கறுப்புக் கூண்டு. அதனுள் வெள்ளைத் திரை. ஆர்மோனியம், டோலக்கு, நாதஸ்வரம், மிருதங்கம், குழலிசை மாறி மாறி ஒலிக்கிறது. ஜால்ரா சத்தம் மிகுதியாகவே கேட்கிறது. ஆடை, ஆபரணங்கள் ஜொலிக்க துரியோதன மகாராஜா குதித்துக் குதித்து ஆடிப் பாடியபடி வருகிறார்.

“தந்தானே, தந்தானே… தானே... தானே தந்தானே, தந்தானே... வந்தேனே, வந்தேனே... அஸ்தினாபுரத்து துரியோதன மகாராஜா வந்தேனே…” என்று அவர் பாட, கூடவே குட்டியூண்டு சைசில் சிப்பாய் போல மந்திரி, “தந்தானே, தந்தானே வந்தேனே வந்தேனே...நானுந்தான் வந்தேனே” என ஜால்ரா சத்தம் கூடுகிறது. ஆட்டம் நிற்கிறது. மகாராஜாவுக்கும் மந்திரிக்கும் இடையே தொடங்குகிறது சம்பாஷணை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in