வைகோவுடன் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை!- அழகிரி அதிரடி

வைகோவுடன் எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை!- அழகிரி அதிரடி

கே.சோபியா
readers@kamadenu.in

திமுகவும், அதிமுகவும் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த பிறகும் நாங்குநேரி வேட்பாளரைத் தேர்வு செய்யமுடியாமல் வழக்கம் போல தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி. குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ் என்று பெரிய படையே மல்லுக்கட்டிக் கொண்டிருந்த வேளையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை பேட்டிக்காகத் தொடர்பு கொண்டேன். "ஓ தாராளமாக" என்று கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார் அழகிரி.

பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய முடியாத அளவுக்கு காங்கிரஸ் முடங்கிவிட்டதே? மொழிக்கொள்கை, பொருளாதாரக்கொள்கை என்று எதிலுமே இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது என்பதுதான் இதற்குக் காரணமா?

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வகையில் ஆங்கிலமே ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் இருக்கும் என்று நேரு வாக்குறுதி கொடுத்தாரே, அதுதான் காங்கிரஸ் கட்சியின் மொழிக்கொள்கை. இந்தியாவிற்கு ஒரு பொதுமொழி வேண்டும். அது இந்தியாகத்தான் இருக்க முடியும். எல்லோரும் இந்தியை ஏற்றுக்கொள்வதுதான் சரி என்று நிர்பந்திப்பது பாஜகவின் கொள்கை. உழைக்கும் மக்களிடம் பணப்புழக்கம் இருக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் பொருளாதாரக்கொள்கை. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்ததும் கிராமப்புற பொருளாதாரத்தை முடக்கும் வகையில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை வலுவிழக்கச் செய்தார்கள். கூடவே, பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்து, ஏழை எளியவர்களின் பொருளாதாரத்தை அடியோடு நொறுக்கினார்கள். இந்த நடவடிக்கையினால் இந்தியப் பொருளாதாரம் இரண்டரை சதவீதம் குறைந்துவிட்டது. தாரளமயமாக்கல் என்பது ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம்தான் என்றாலும் எப்படி சீனா அதற்கு சீன முகம் கொடுத்ததோ, அதேபோல காங்கிரஸ் கட்சி தாரளமயமாக்கலுக்கு ஒரு இந்திய முகத்தைக் கொடுத்திருந்தது. ஆனால், இவர்கள் இந்திய முகம் இருப்பதையே எடுத்துவிட்டார்கள். அதனால்தான் அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களுமே நலிவடைந்துவிட்டன அல்லது தனியாருக்கு விற்கப்படுகின்றன. நாங்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறவர்கள். அவர்கள் ஒற்றுமையில் வேற்றுமை காண்கிறவர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in