நான் கடந்து வந்த பாதை!- ஒப்பனையால் உயரம் தொட்ட திருநங்கை

நான் கடந்து வந்த பாதை!- ஒப்பனையால் உயரம் தொட்ட திருநங்கை

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மகளுக்குத் திருமணம் என்றால், மண்டபத்தை புக் செய்வதற்கு முன்னால், முதலில் சீமா வினித்தை புக் செய்துவிடுகிறார்கள் மலையாளிகள். மணப்பெண் அலங்காரத்தில் தேர்ந்த நிபுணராகத் திகழும் சீமா வினித் ஒரு திருநங்கை என்பது தான் ஆச்சரியம். திருநங்கை எனும் அடையாளத்துடனேயே அனைத்துத் தரப்பினராலும் கொண்டாடப்படும் சீமா, இந்த இடத்துக்கு வருவதற்காக எதிர்கொண்ட சோதனைகள் சொல்லில் அடங்காதவை!

திருவனந்தபுரத்தில் உள்ள சீமாவின் ஒப்பனைக் கூடத்துக்கு நான் சென்றிருந்தபோது, மணப்பெண் ஒருவருக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார். அடுத்தடுத்து தங்கள் முறைக்காகக் காத்திருக்கிறார்கள் பல பெண்கள். பரபரப்பான பணிக்கு இடையே கிடைத்த இடைவெளியில் என்னிடம் பேசத் தொடங்கினார்.

“என்னோட சின்ன வயசுலயே கருத்து வேறுபாட்டால அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சுட்டாங்க. நானும் என்னோட தம்பி வினோத்தும், அம்மா துளசியோட அரவணைப்புலதான் வளர்ந்தோம். அப்போ என் பேரு வினித். எல்லாரையும் போல ஆர்வமா ஸ்கூலுக்குப் போயிட்டு வந்தேன். எட்டாம் கிளாஸ் படிக்கும்போது எனக்குள்ள பெண் தன்மையை உணர்ந்தேன். இதை வீட்ல சொன்னதும் மொத்தக் குடும்பமும் எதிர்த்து நின்னாங்க. என்கூட படிச்ச ஃப்ரெண்ட்ஸ்கூட என்னைப் புரிஞ்சுக்கல. ஒருகட்டத்துல விரக்தி அதிகமாக, வீட்டை விட்டு வெளியேறினேன். கிடைச்ச ட்ரெயின்ல ஏறிப் போனேன். திருச்சூர்ல இறங்குனேன். எனக்கு எந்த வேலையும் தெரியாத வயசு அது. அங்க ஹோம் நர்ஸ் வேலைக்கு ஒரு தனியார் வேலைவாய்ப்பு மையத்துல பதிவுசெஞ்சேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in