ஹாட்  லீக்ஸ்: விராலிமலை... விசும்பும் வேட்பாளர்கள்!

ஹாட்  லீக்ஸ்: விராலிமலை... விசும்பும் வேட்பாளர்கள்!

ராஜபாளையம்... அப்பவே செட்டில்மென்ட்!

வெங்கய்ய நாயுடு தந்த உத்தரவாதத்தால் மூன்று மாதங்களுக்கு முன்பே ராஜபாளையத்துக்கு வந்த நடிகை கவுதமி, அங்கேயே வீடுபிடித்துத் தங்கிக் கொண்டு தொகுதியை தனக்காக தயார்படுத்திக் கொண்டிருந்தார். ஆனால், குறுக்கே வந்து கேட் போட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக தலைவர் எல்.முருகன், ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோரிடம் பைபாஸில் பேசி ராஜபாளையத்தைத் தனக்காக வாங்கிவிட்டார்.

“அப்படியே கவுதமியிடமும் பேசிவிடுங்கள்” என்று பாஜக தரப்பில் சொன்னார்களாம். கவுதமியை அழைத்துப் பேசிய பாலாஜி, “இந்த மூணு மாசத்துல நீங்க எவ்ளோமா செலவு செஞ்சிருப்பீங்க... அத நான் குடுத்துடுறேன் விடுங்க” என்று நேரடியாகச் சொன்னாராம். அமைச்சர் தரப்பிலிருந்து 8 சி கை மாறிய பிறகே, கவுதமி தரப்பில் கமுக்கமானார்களாம். இந்த டீலை உடனிருந்து சுமூகமாக பேசிமுடித்தது கவுதமியின் தங்கை சாய்ரா பானு என்பது கூடுதல் தகவல்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in