36 ரன்களிலே... ஆஸ்திரேலியாவில் ‘ஆட்டமிழந்த’ இந்திய அணி!

36 ரன்களிலே... ஆஸ்திரேலியாவில் ‘ஆட்டமிழந்த’ இந்திய அணி!

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

நாடி, நரம்பு, ரத்தம், சதை என உடல் முழுவதும் கிரிக்கெட் வெறி ஊறிப்போன இந்திய ரசிகர்கள், அடிலெய்ட் டெஸ்ட் கிரிக்கெட்டைக் கனவில்கூட நினைத்துப்பார்க்க மாட்டார்கள். சைக்கிள் ஸ்டாண்டில் சரிந்துவிழும் சைக்கிள்களைப் போல, இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக வீழ்ந்ததைப் பார்த்து ரத்தக் கண்ணீர் வடிக்காத குறைதான். இந்த இதழை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது, புகழ்பெற்ற ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை மெல்போர்னில் இந்தியா விளையாடிக் கொண்டிருக்கும். எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலாவது இந்தியா மீண்டெழுமா என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஏக்கமான கேள்வியாக இருக்கிறது.

வரலாறு காணாத வாட்டம்

அடிலெய்டு டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 36 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1974-க்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டியில் எடுத்த மிக மோசமான ஸ்கோர், கடந்த 96 ஆண்டுகளில் பதிவான மோசமான டெஸ்ட் ஸ்கோர் என வரும் புள்ளிவிவரங்கள் வேறு இந்திய மானத்தை இன்ஸ்டால்மென்டில் வாங்குகின்றன. தொடக்க வீரர்கள் சரியில்லை, மிடில் ஆர்டர் சரியில்லை, இந்தியா ஒயிட் வாஷ் ஆகிவிடும் என இந்திய, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஆளாளுக்குப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in