கபிலன் கவிதை

கபிலன் கவிதை

தெருவில் ஒரு குரல் கேட்டது
’’பாத்திரத்துக்குப் பேர் போடுறதே…’’
வழிமறித்து
ஒரு எழுத்துக்கு எவ்வளவு என்பதற்குள்
ஒரு ரூபா என்றான்.
அவனிடம் சொன்னேன்
உன்போல் எனக்கு எழுதத் தெரியாது
என்போல் உனக்கும் 
எழுதத் தெரியாது
நீ பாத்திரத்தில் எழுதுகிறாய்
நான் பாத்திரத்துக்கு எழுதுகிறேன்
இருவர் பாத்திரமும்
உடையாமல் பார்ப்பது
அவரவர்
பாத்திரத்திற்கு அழகு!

பந்தல் போடணும்
வாழமரம் கட்டணும்
பொண்ணுக்கு தாலி செஞ்சாச்சான்னு
கேக்கணும்
சின்னவளுக்கும்
பாவாடை சட்டை எடுக்கணும்
சாப்பாட்டுக்கும் மோளத்துக்கும்
தாய் மாமன் இருக்கான்
நலங்கு வைக்கணும்
பந்தல்ல கட்டுறதுக்கு
கூரப்பொடவ எடுக்கணும்
எனக்கும் ஒரு நல்ல பொடவ இல்ல
பக்கத்து வீட்ட
பந்திக்கு சொல்லி வைக்கணும்
கல்யாணத்துல தொடப்பக் குச்சிய
குத்திக்கிட்டு இருந்தா
நல்லாவா இருக்கும்?
காதுல மூக்குல
போட்டுக்கறதுக்கு
லெட்சுமிகிட்ட எரவல் கேக்கணும்
இதெல்லாம் தெரியாம
தங்கச்சி கொலுசு கேட்டு
அடம்புடிக்குறா
எல்லா சாதி சனத்துக்கும்
நோட்டீசு வச்சாச்சு
தலைக்கு மேல எவ்ளோ
வேல கெடக்கு
இந்த மனுசன வேற காணோம்.
அலமேலு அக்கா
ரெண்டாயிரம் ரூவா இருந்தா தாயேன்
மொய் வந்தா கொடுத்துடுறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in