ஒன்பது வயதில் ஒரு கிச்சன் கில்லாடி!- நளபாகத்தில் அசத்தும் சென்னை சிறுமி

ஒன்பது வயதில் ஒரு கிச்சன் கில்லாடி!- நளபாகத்தில் அசத்தும் சென்னை சிறுமி

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

சமையல் என்பது பெண்களுக்கான கலை மட்டுமல்ல எனும் உண்மையை, அனைவரும் உணர்ந்துவிட்ட காலம் இது. குறிப்பாக, கரோனா காலத்தில் சகலரும் சமையல் கலையில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில், 9 வயதே ஆன சிறுமி லட்சுமி சாய்ஸ்ரீ, 58 நிமிடங்களுக்குள் 46 வகையான உணவு வகைகளைச் செய்து நளபாகப் பிரியர்களை மலைக்கச் செய்திருக்கிறார். இந்தச் சாதனை, யுனிகோ உலக சாதனைப் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த லட்சுமியை வாழ்த்துப் பூங்கொத்துடன் சந்தித்தேன். “அங்கிள் 5 நிமிஷம் காத்திருங்க. ஆன்லைன் கிளாஸ் முடிஞ்சுடும்” என்று சொன்னவர், சில நிமிடங்களில் பேசத் தயாரானார். “இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, தயிர்சாதம், சிக்கன் 65, மீன் பொறியல்னு 8 நிமிஷத்துல 46 உணவுகளைச் செய்துகாட்டினேன்’’ என தொடங்கினார்.

“எல்லாம் சரி, இத்தனைச் சின்ன வயதில் சமையலில் ஆர்வம் வந்தது எப்படி?” என்றேன். “அதை நான் சொல்லுறேன்” என்றவாறே ஆஜரானார் லட்சுமியின் அம்மா கலைமகள். “என் கணவர் வெளிநாட்டில் வேலை செய்றார். வீட்ல நானும், இரண்டு குழந்தைங்களும் இருக்கோம். நானும் வேலை பார்க்கிறேன். லட்சுமி ஐந்தாம் வகுப்பு படிக்கிறா. நான் வேலைக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்ததும் சமையலில் எனக்கு உதவி பண்ணுவா. அப்போதான் அவளுக்குள்ள இருக்கிற சமையல் ஆர்வத்தைக் கண்டுபிடிச்சேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in