எடப்பாடியாரை ஏற்கமாட்டோம்- கூட்டணிக்கு குண்டு வைக்கிறதா பாஜக?

எடப்பாடியாரை ஏற்கமாட்டோம்- கூட்டணிக்கு குண்டு வைக்கிறதா பாஜக?

குள.சண்முகசுந்தரம்
shanmugasundaram.kl@kamadenu.in

தங்களுக்குள் ஆயிரம் மனமாச்சரியங்கள் இருந்தாலும் ‘எடப்பாடியார்தான் எங்களின் முதலமைச்சர் வேட்பாளர்’ என்று சொல்லி அதிமுகவினர் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டார்கள். அவரும் யாருக்காகவும் காத்திருக்காமல் தனது சொந்த ஊரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.

ஆனால், அதிமுக தயவில் தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜகவினரின் கண்களுக்குத்தான் எடப்பாடியார் ஏனோ இளக்காரமாகத் தெரிகிறார். அதனால்தான் நேற்றைக்கு வந்த குஷ்புகூட, “எடப்பாடி பழனிசாமியை நாங்கள் ஏன் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி கேட்கிறார்.

தங்களின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை குஷ்புவிடம் கேட்டெல்லாம் அறிவிக்க வேண்டிய கஷ்டகாலம், ஆளும்கட்சியான அதிமுகவுக்கு ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டம்தான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in