மோடி குகையும் ரவீந்திரநாத் கல்வெட்டும்!

மோடி குகையும் ரவீந்திரநாத் கல்வெட்டும்!

தொகுப்பு: தேவா

கடந்த வாரத்தில் இணையத்தில் ட்ரெண்டிங் ஆன விஷயங்கள் இரண்டு. ஒன்று, மோடியின் கேதர்நாத் குகை விசிட். இரண்டு, `தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார்’ கல்வெட்டு. இந்த இரண்டுமே கடுமையான கிண்டலுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகின. மோடி கஷ்டப்பட்டு 11 ஆயிரம் அடி மலை மேல் ஏறி தியானம் செய்ததைவிட அதைப் புகைப்படம் எடுத்த முகம் தெரியாத அந்த போட்டோகிராபருக்காகப் பலர் வருத்தம் தெரிவித்தனர்.

மோடி தியானத்தில் அமர்ந்திருந்த அந்த குகையின் வாடகை, அதில் என்னென்ன வசதிகள் என்றெல்லாம் தகவல்கள் வெளியாக வெளியாக இன்னும் அதிகமாக அந்தப் படம் வைரலானது. இந்தப் படத்தில் வடிவேலுவைச் சேர்த்து நெட்டிசன்கள் அடித்த லூட்டி சிரித்து மாளாது. இன்னொரு பக்கம், ஓ.பி.ரவீந்திரநாத்குமாரின் கல்வெட்டு. ஓபிஎஸ்ஸுக்கு பாஜக ஆதரவு அதிகமாக இருந்தாலும் இப்படியா, தேர்தல் முடிவு வரும் முன்பே  ‘பாராளுமன்ற உறுப்பினர்’ என்று கல்வெட்டு வைப்பார்கள் என்று திட்டித் தீர்த்துவிட்டார்கள். கடைசியில், இந்த வறுவல்களை எல்லாம் மீறி ரவீந்திரநாத் தேனிக்கு எம்பி  ஆனது தனிக்கதை.

எனது விளையாட்டை இனிதான் திமுக பார்க்கப் போகிறது. - சீமான் 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in