கடைசிவரை குறள் சுமப்பேன்!

கடைசிவரை குறள் சுமப்பேன்!

கரு.முத்து

பொதுவாக டீக்கடைக்குப் போனால் டீ பருகலாம். ஆனால், தங்கவேலனாரின் டீக்கடைக்குப் போனால் குறளமுதமும் சேர்த்துப் பருகலாம்!

பேராவூரணி பேருந்து நிலையம் அருகில் நீலகண்ட பிள்ளையார் கோயில். அதன் எதிரே இருக்கிறது தங்கவேலனாரின் டீக்கடை. காவி வேட்டி, காவித் துண்டு சகிதம் நின்று கடையில் டீ ஆற்றும் தங்கவேலனார், எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும், “ஐயா வணக்கம்... வாங்க...” என்று வாய் நிறைய வரவேற்கிறார். இங்கே டீ குடிக்க வருபவர்களைவிட தங்கவேலனாரின் திருக்குறள் கேட்க வருபவர்கள்தான் அதிகம். எதைச் சொல்வதாக இருந்தாலும் தங்கவேலனார் அதற்கு ஒரு குறளை மேற்கோள்காட்டி விளக்கம் சொல்லும் அழகே அழகு. அதனால்தான் இவரை இந்த ஊர்க்காரர்கள் ‘திருக்குறள் தாத்தா’ என்று செல்லமாய் அழைக்கிறார்கள்.

வாய்மொழியாகச் சொல்வது மட்டுமல்லாது, கடந்த இருபது வருடங்களாகக் கடைக்கு வெளியே ஒரு கரும்பலகை வைத்து அதில் தினம் ஒரு திருக்குறளுக்குப் பொருள் தீட்டியும் வருகிறார் இந்தக் குறள் தாத்தா! திருவள்ளுவர் திருநாளுக்கு இவரது டீ கடையில் ஒரு ரூபாய்க்கு டீ கிடைக்கும். நான் போயிருந்த நாளில்,‘சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை.’ என்ற குறளுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தது தாத்தா கடையின் சங்கப் பலகை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in