கொலைகாரக் கொரோனா - சீனாவை மிரட்டும் புதிய வைரஸ்

கொலைகாரக் கொரோனா - சீனாவை மிரட்டும் புதிய வைரஸ்

சந்தனார்
readers@kamadenu.in

சீனாவில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், அந்நாட்டை மட்டுமல்லாமல், உலகையே நடுங்கச் செய்திருக்கிறது. இந்த வைரஸ் ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் அபாயம் கொண்டது என்று கண்டறியப் பட்டிருப்பதுதான் நடுக்கத்துக்குக் காரணம். லூனார் புத்தாண்டைக் கொண்டாட கோடிக்கணக்கான சீனர்கள், உள்நாட்டு நகரங்களுக்கும் வெளிநாடு களுக்கும் பயணித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்த வைரஸ் பரவிவருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தொற்றின் தொடக்கப் புள்ளி

சீனாவின் மத்திய மாகாணமான ஹூபேயின் வூஹான் நகரில் உள்ள கடல் உணவுச் சந்தைதான் ஆபத்தான இந்த வைரஸ் பரவலுக்கு ஆரம்பப் புள்ளி வைத்தது. இந்தச் சந்தையில் மீன், நண்டு உள்ளிட்ட கடல் உணவு வகைகளுடன், கோழி, பன்றி போன்றவற்றின் இறைச்சியும் விற்கப்படுகிறது. டிசம்பர் 31-ம் தேதி மக்கள் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கக் காத்திருந்த சமயத்தில்தான், வூஹான் மருத்துவமனையில் இந்த அபாயம் உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் பலர், வூஹான் கடல் உணவுச் சந்தையுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புடையவர்களாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மறுநாளே இந்தச் சந்தை மூடப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in