கோவையில் ஓர் ஓவியத் தெருவிழா!

கோவையில் ஓர் ஓவியத் தெருவிழா!

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“ஓவியம் வரைதல் என்பது நாட்குறிப்பின் இன்னொரு வடிவம்தான்” என்றார் புகழ்பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோ. பொங்கிவரும் படைப்பாற்றலைக் கொண்டு வாழ்க்கைத் தருணங்களையும், பார்வையில் படும் பொருட்களையும், கற்பனையை விஞ்சும் காட்சிகளையும் வரைவது என்பது ஓவியக் கலையின் உன்னதமான தனித்தன்மை. அந்த வகையில், ஜனவரி இரண்டாம் வாரத்தின் இறுதி நாட்களில் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஸ்கீம் ரோட்டில் நடந்த தெருவோர ஓவியத் திருவிழாவில் பல ஓவியர்கள் கலந்துகொண்டு தங்கள் படைப்பாற்றலைப் பறைசாற்றினார்கள்.

வரிசையாய் வண்ண வண்ணக் கூண்டுகள். அதைத் தாண்டி நிறைய திறந்தவெளி அரங்குகள், கூடாரங்கள் என உருவாகியிருந்த ‘ஓவியத் தெரு’, ஸ்கீம் ரோட்டில் நடைபயின்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தத்ரூப ஓவியங்கள் முதல், நவீன ஓவியங்கள் வரை எல்லா வகையான தூரிகைப் படைப்புகளும் அங்கு காணக்கிடைத்தன.

‘ஆர்ட் ஸ்ட்ரீட்’ எனும் அமைப்பு நடத்திய இந்த ஓவியத் திருவிழாவில் வயது வித்தியாசமின்றி பல கலைஞர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சிலரைச் சந்தித்துப் பேசினேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in