ஹீரோக்களின் ஃபிட்னஸ் மாஸ்டர்- ட்ரெய்னர் சிவா

ஹீரோக்களின் ஃபிட்னஸ் மாஸ்டர்- ட்ரெய்னர் சிவா

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

தமிழ் சினிமாவில் அட்டகாசமான உடற்கட்டுடன் இருக்கும் நடிகர்கள் குறைவு. எனினும், ஜிம்களை நோக்கி இளைஞர்களை ஈர்ப்பதில் இவர்களின் பங்கே மிக அதிகம். அப்படிப்பட்ட நடிகர்களுக்கு உடற்பயிற்சி அளித்து அவர்களின் கட்டுக்கோப்பான உடல்வாகுக்குப் பக்கபலமாக இருப்பவர் ‘ஃபிட்னஸ்’ பயிற்சியாளர் சிவா. அஜித், அர்ஜுன், அருண் விஜய், பரத், கௌதம் கார்த்திக், லாரன்ஸ், கதிர், தினேஷ் என்று பல நடிகர்களுக்கு இவர்தான் ஜிம் வாத்தியார். சிவாவைச் சந்திக்க சென்னை முகப்பேரில் உள்ள அவரது ஜிம்மிற்குச் சென்றிருந்தேன். உருண்டு திரண்ட புஜபலத்துடன் 25 கிலோ ‘டம்பெள்’களை வைத்துப் பயிற்சி செய்துகொண்டிருந்தவர். உடற்பயிற்சியை நிறுத்தாமல் எனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

பாடி பில்டிங் துறையில் ஆர்வம் வந்தது எப்படி?

சென்னையில வறுமையான குடும்பச் சூழல்ல பிறந்த பையன் நான். அப்பா துறைமுகத்துல கடைநிலை ஊழியர். சின்ன வயசுல இருந்தே எனக்கு ஸ்போர்ட்ஸ் மேல ஆர்வம் அதிகம். பள்ளியில் படிக்கும்போது மாவட்ட அளவிலான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்துல முதல் பரிசு வாங்கினேன். அந்தச் சமயத்துல என்னோட அண்ணன் கராத்தே ஸ்கூல் ஆரம்பிச்சார். அவர்கிட்ட கராத்தே கத்துகிட்டு பிளாக் பெல்ட் வாங்கினேன். பள்ளியில படிக்கும்போதே நானும் கராத்தே கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். அப்போதான் கராத்தே கிளாஸ் மூலமா வணிக ரீதியா பெரிய வாய்ப்புகள் இல்லைன்னு தெரியவந்துச்சு. “உன் உடல்வாகு நல்லா இருக்கு. பேசாம பாடி பில்டிங் பண்ணு”னு என் அண்ணன் தான் சொன்னார். பாடிபில்டிங் பண்ண ஆரம்பிச்சு மிஸ்டர் இந்தியா பட்டமும் வாங்கிட்டேன். அப்பா ரிட்டையர்டு ஆனதும் 2 லட்சம் ரூபாய் பணம் வந்தது. அதை வச்சு ஜிம் ஆரம்பிச்சேன். கூடவே, ஃபிட்னஸ் தொடர்பான கோர்ஸ் படிச்சேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in