திருக்குறள் ராசா- குறள் பரப்பும் குறு விவசாயி!

திருக்குறள் ராசா- குறள் பரப்பும் குறு விவசாயி!

ரோகிணி
readers@kamadenu.in

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். திருக்குறளைக் கற்றோருக்குத் திரும்பிய இடமெல்லாம் சிறப்புதான். அப்படித்தான் நாமக்கல் மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தின் க.ராசா கவுண்டர், செல்லும் இடங்களெல்லாம் குறளின் பெருமையைப் பரப்புவதால், ‘திருக்குறள் ராசா’ எனக் கொண்டாடப்படுகிறார்.

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அனைத்திலும் பிரபலமாகியிருக்கும் இவர் படித்தது பத்தாம் வகுப்புதான். முழுநேர விவசாயியான இவர், தன்னுடைய 4.5 ஏக்கர் நிலத்தில் சோளம், வாழை, காய்கறி எனப் பயிர் செய்துவருகிறார். கிடைக்கும் நேரங்களில் இளம் தலைமுறையினருக்குத் திருக்குறள் வகுப்புகள் எடுக்கிறார். இதுவரை 200 பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் திருக்குறள் வகுப்பு எடுத்திருக்கிறார். ‘திருக்குறள் திலகம்’, ‘திருக்குறள் வேந்தன்’, ‘முப்பால் காவலர்’ உள்ளிட்ட பட்டங்களுடன் எண்ணிலடங்கா பரிசுகளையும் விருதுகளையும் வென்றிருக்கும் ராசா கவுண்டரைச் சந்திக்கச் சென்றிருந்தேன்.

நாமக்கல்லிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் ஒரு குன்றின் அடிவாரத்தில் இருக்கிறது கரட்டுப்பட்டி. அங்கே தனது நிலத்தில் விளைந்த சோளப்பயிரை அறுத்துக் குவித்துக்கொண்டிருந்தார் ராசா கவுண்டர். விஷயத்தைச் சொன்னதும், “ஒரு நிமிஷம் இருங்க. இதே கோலத்துல உங்களுக்குப் பேட்டி கொடுத்தா நல்லாயிருக்காது. திருக்குறள் ராசாவாகி வர்றேன்” என்று தன் வீட்டு முற்றத்தில் நாற்காலியில் என்னை அமர வைத்துவிட்டு உள்ளே சென்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in