அர்ஜென்ட் வேலை இருக்கு... ஆர்எஸ்பியைக் கூப்பிடுறேன்!

அர்ஜென்ட் வேலை இருக்கு... ஆர்எஸ்பியைக் கூப்பிடுறேன்!

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

அன்று படுவேகத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்த பாச்சா, கீழே குனிந்து பார்த்தபோது, டாஸ்மாக் வாயிலில் தவம் கிடக்கும் கூட்டம் கண்ணில் பட்டது. கடை திறப்பதற்காகக் காலையிலிருந்தே காத்திருக்கும் குடிமக்களைப் பார்த்ததும் கன்னத்தில் போட்டுக்கொண்டு கைகூப்பி வணங்கினான். “என்னய்யா… பகல்லேயே பார்ட்டி கொண்டாட வெயிட் பண்றாங்க. அவங்களுக்குப் போய் வணக்கம் வைக்கிறே?” என்று கிண்டல் செய்தது பைக்.

“நீ வேற, மக்கள் அதிகமா வாங்கிக் குடிக்கிறதாலதான் அரசுக்கு வருமானம் வருதுன்னு அமைச்சரே சொல்லிருக்காரு. மாநில முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டுக் குடிக்கிற மக்களுக்கு மரியாதை குடுக்கிறதுல என்ன தப்புங்குறேன்?” என்றான் பாச்சா.
“அமைச்சரே சொல்லிட்டாரா... அப்ப அப்பீல் கிடையாது. நம்ம பொழைப்பைப் பார்ப்போம் வா…” என்றது பைக்.
முதலில் ஸ்டாலின்.

பிரசாந்த் கிஷோர் வரவால் கலகலத்துப்போயிருக்கும் கட்சி நிர்வாகிகளின் கவலைகளைப் போக்க, கடுமையாக முயற்சி செய்து மனிதர் களைத்துப் போயிருந்தார். பாச்சாவைப் பார்த்ததும் மேலும் களைப்பாகி நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.
“என்ன சார், ஆர்எஸ்எஸ் அனுதாபிகளைச் சமாளிக்கிறதைவிட ஆர்.எஸ்.பாரதியைச் சமாளிக்கிறது பெரும் அவஸ்தையா இருக்கும்போல?” என்றான் பாச்சா எடுத்த எடுப்பில்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in