மாநிலக் கட்சிகளுக்கே மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்!- கார்த்தி சிதம்பரம் தடாலடி

மாநிலக் கட்சிகளுக்கே மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்!- கார்த்தி சிதம்பரம் தடாலடி

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் கிடைத்திருப்பதோடு, அவர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கியிருக்கிறது நீதிமன்றம். மனிதர் அந்த மகிழ்ச்சியில் தொகுதிக்குள் உற்சாகத்துடன் வலம் வருகிறார். கூடவே, சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய சிஏஏவுக்கு எதிரான போராட்டத்திலும் தன்னார்வத்துடன் கலந்துகொண்டு உற்சாகப்படுத்தியிருக்கிறார். அவருடன் ஒரு பேட்டி.

எடப்பாடி பழனிசாமியின் மூன்றாண்டு ஆட்சியின் சாதனைகள் என்று எதைச் சொல்வீர்கள்?

எடப்பாடியின் ஆட்சி தனித்த ஆட்சி கிடையாது. பாஜகவுக்கு சப்பை கட்டுகிற, அவர்கள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே செய்கிற ஆட்சியாகத்தான் இதைப் பார்க்கிறேன். இதை அதிமுக ஆட்சியாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. மோடி தன்னுடைய இந்துத்துவக் கொள்கையில் குறியாக இருக்கிறாரே தவிர, நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியோ, வளர்ச்சியைப் பற்றியோ அவருக்குக் கவலையே இல்லை. பிறகு எங்கிருந்து சாதனைகளைப் பட்டியல் போடுவது? காவிரி வேளாண் மண்டலம், காவிரி குண்டாறு இணைப்பு போன்ற அறிவிப்புகள் மட்டும் மக்களைக் குஷிப்படுத்திவிடாது. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். காவிரி குண்டாறு திட்டத்துக்கு ஜல் சக்தி அமைச்சகம் எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் கேட்டேன், இதுவரையில் ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in