ரஜினியின் நேர்மை சந்தேகத்திற்குரியது!- பரபரப்பைக் கிளப்பும் மு.நாகநாதன்

ரஜினியின் நேர்மை சந்தேகத்திற்குரியது!- பரபரப்பைக் கிளப்பும் மு.நாகநாதன்

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

தமிழக அரசின் திட்டக்குழு துணைத் தலைவராக, கேபினட் அந்தஸ்தில் இருந்தவர் பேராசிரியர் மு.நாகநாதன். எளிமையானவர் என்று பெயரெடுத்த இவர், யாரையும் கடிந்து பேசாதவர். அப்படிப்பட்டவர் ரஜினியைப் பற்றி சொன்ன கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. மத்திய - மாநில பட்ஜெட்டுகள் வாசிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவருடன் ஒரு பேட்டி:

ரஜினியைப் பற்றி அப்படி என்னதான் பேசினீர்கள்?

 திராவிடர் விடுதலைக் கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசியது அது.  “50 வருட திராவிட ஆட்சி தமிழ்நாட்டை விட்டுப் போகணும்னு நினைக்கிறீங்க. மாற்றம் வேணாம்னு சொல்லல. இதைவிட முற்போக்கான ஆட்களைக் கொண்டுவாங்க. வரிகட்டாத, பிற்போக்கான ரஜினிகாந்த்தை கொண்டு வர்றீங்களே” என்றேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in