குற்றத்தைத் தடுக்க வேண்டியவர்களே குற்றவாளிக் கூண்டில்..!

குற்றத்தைத் தடுக்க வேண்டியவர்களே குற்றவாளிக் கூண்டில்..!

காவல் துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. குற்றம் செய்தவர்கள் மீதுகூட  முறை தவறி அதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்பது சட்டம். ஆனால், காவல் துறையில் இருக்கும் சிலர், அப்பாவிகள் மீதுகூட அதிகார துஷ்பிரயோகம் செய்து சந்தோஷப்படுகிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.

கடந்த வாரம் ஓட்டுநர் ராஜேஷ் என்பவரின் தற்கொலை சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. தற்கொலை செய்வதற்கு முன், காவல் துறையினரால் தான் எப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்டேன் என்பதை வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார். கடந்த வாரம் சமூக வலைதளங்களில் அவருடைய தற்கொலைச் செய்தியும், அந்த வீடியோ பதிவும் அதிகம் பகிரப்பட்டது. குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டிய காவல்துறையினரே பல நேரங்களில் இப்படி குற்றவாளிக் கூண்டில் நிற்பது வேதனையான விஷயம். 

தமிழகத்தைச் சார்ந்த எழுத்தாளர் மு.யூசுப்பிற்கு சிறந்த மொழி பெயர்ப்புக்காக  சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

- செய்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in